ரொரன்ரோ பெரும்பகுதி வாழ் தமிழ் கத்தோலிக்க மக்களின் கத்தோலிக்க விசுவாசத்தினையும், கத்தோலிக்க நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து எமது பங்கில் திருமுழுக்கு, ஒப்புரவு, நற்கருணை, உறுதிப்பூசுதல், குருத்துவம், திருமணம், நோயிற்பூசுதல் ஆகிய திருவருட்ச் சாதனங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள் காலம் தாமதிக்காமல் தொடர்பு கொண்டால் நாம் எமது மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கின்றோம்.
திருமுழுக்கு அருட்சாதனம்
தமது பிள்ளைகளுக்கு திருமுழுக்கு அருட்சானம் கொடுக்க விரும்புபவர்கள் தயவுசெய்து பங்குத்தந்தையை தொடர்பு கொள்ளவும். தற்போது நடைமுறையிலுள்ள முகக்கவசம் அணிந்திருத்தல், சமூக இடைவெளி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை போன்ற நடைமுறைகளுடன் பங்குகொள்ளலாம்.
ஒப்புரவு அருட்சாதனம்
ஒப்புரவு அருட்சாதனம்; பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தயவுசெய்து பங்குத்தந்தையை தொடர்பு கொள்ளவும். முன்னேற்பாட்டுடன் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
திருமண அருட்சாதனம்
திருமண அருட்சானத்திற்கான முன்பதிவுகளைச் செய்தவர்கள் தயவுசெய்து பங்குத்தந்தையை காலம் தாமதிக்காமல் தொடர்பு கொள்ளவும்.
முதல் நன்மையும் உறுதி பூசுதலும்
தற்போது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கமைய முதல் நன்மையும் உறுதி பூசுதலும் நடைபெறமாட்டாது. சரியான நேரத்தில் அவற்றிற்கான அறிவிப்புக்களைத் தருவோம்.