பங்குச் சபையின் செயல்பாடுகள் என்ன?
ஓர் பங்கு சபையானது, ஒரு சில அங்கத்தினரை உள்ளடக்கிய குழு. ஆலயத்தின் பங்கு பிரதிநிதிகள், பங்கின் வளர்ச்சியில் ஈடுபாடுகொண்டு பணி புரிபவர்கள். இவர்கள் பொதுவாக பங்கினால் அல்லது ஆலய பொது நிலையினரால் தெரிவுசெய்யப்பட்டு, பங்குக்குருவிற்கு, நீண்டகால திட்டமிடல், பல்வேறு செயல்பாடுகளிலும் முழுமையாக ஒத்துழைப்புடன் பங்களிப்பவர்கள்.
திட்டமிடலும் செயல்படுத்துதலும்:
திட்டமிடப்பட்டவற்றையும், முக்கிய செயற்படுத்த வேண்டியவற்றையும் பங்கு அங்கத்தவர்களுக்கு முன்பாக தெரியப்படுத்துதல் பங்கு சபையினரது முக்கிய கடைமையாகும். பங்குச் சபை அங்கத்தினர் செயற்திட்டக் கொள்கையை முன்வைத்து, திருச்சபைக்கு உள்ளடக்கிய திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை திறம்பட செயல்படுத்த முழுமையாக உழைப்பவர்கள்.
பங்களிப்பும் தீர்மானங்களும்:
பங்கு சபையினர் எல்லோரையும் இணைத்து செயல்படல் வேண்டும். உதாரணமாக ஏனைய ஆலய உறுப்பினரையும் தீர்மானம் எடுத்துதலில் இணைத்துக் கொள்ளல் வேண்டும். பொதுநோக்குடன் எல்லோரும் ஒன்றிணைந்து ஓர் தீர்மானம் எடுத்தல் நல்லதோர்முறை என்பதை, ஆலய உறுப்பினரிடம் இருந்து ஆலோசனை கேட்டு அறிந்து கொள்ளல்வேண்டும்.
ஒத்துழைப்பும் பங்களிப்பும்:
பங்கு சபை அங்கத்தினர் ஏனைய பங்குகளுடனும், மறைமாவட்ட நிலையத்தினருடனும் நல்லுறவுகொண்டு இணைத்துக் கொள்ளல்வேண்டும். மறைமாவட்ட நோக்கங்களுக்கு பங்களிப்பதுடன், ஆலய சொத்துக்களான நிலம், கட்டிடம், தளபாடம் மற்றும் அனைத்தையும் கண்காணித்து பேணல்படவேண்டும்.
பிரச்சனைகளை, கருத்துவேறுபாடுகளை ஆக்கபூர்வமாக நிர்வகிக்க எடுக்கப்படும் 12 வழிகள்:
1. ஒரு விடயத்தை ஆராய்வதற்கு வேண்டிய நேரத்தையும் இடவசதியையும் ஒத்துக்கொள்ளல்
2. உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது நேர்மையான உறுதியாயிருத்தல்.
3. ஒருவரைக்குறித்து மையப்படுத்தாது பிரச்சனைகளை ஆராய நோக்காகக்கொண்டிருத்தல்
4. நடுநிலையான ஒரு மத்தியஸ்தரைத் தெரிவுசெய்தல்.
5. நேர்மையான முதிர்ந்த கருத்து எண்ணங்களை வளர்த்துக்கொள்ளல்;.
6. தீர்மானத்தைத் தேடல்.
7. திட்டத்தில் குறிக்கோளாக இருத்தல்.
8. திறந்த உள்ளமும் எதர்க்கும் தயாரான நிலையும்.
9. கொடுக்கப்பட்ட வேலையில் உறுதியாயிருத்தல்
10. பிரச்சனைகளை எதிர்கொள்ளும்பொழுது அதனை முறையாக கையாளுதல்.
11. தீராக ஆராய்ந்து அறிந்து கேட்டுக்கொள்ளல்.
12. மன்னித்து, மறந்து விடல்.
அழிவுக்கான நிர்வாகம்
1. பாதுகாப்பு இல்லாத வேறு ஒருவரை பிடித்துக்கொள்ளல்.
2. உணர்ச்சிகளை அடக்குதல்.
3. கருத்துவேற்றுமையை சொந்தமாக்குதல்.
4. நண்பரை மத்தியஸ்தராக தெரிவுசெய்தல்.
5. எதிர் மறைத் தன்மையும், பழிவாங்கும் உள்ளமும்.
6. குறை கூறுவதற்கு ஒருவரைத் தெரிந்துகொள்ளல்.
7. பொதுமைப்படுத்துதலும், மிகைப்படுத்துதலும்.
8. மௌனமும் பெரும் எண்ணமும்.
9. வேறு ஒருவரில் குற்றம் கண்டுகொள்ளல்.
10. பிரச்சனை எழும்போது வெளிநடப்புச்செய்தல்.
11. ஊகித்து, கற்பனைசெய்து ஆதிக்கம். அதிகாரம் செலுத்துதல்.
12. பிடிவாதமாக அதிகாரத்துடன் உறுதிமொழி வழங்கல்.
WHAT ARE THE DUTIES OF A PARISH COUNCIL?
A parish council is a group of people who represent the parish of a church and assist in the growth of the church community. They are usually chosen by the parish or community, and assist the pastor with long-term planning and other duties.
PLANNING & IMPLEMENTING
A main duty of the parish council is to put together plans and priorities for the parish community. It may set policies for the council members and the church as a whole, and it is responsible for making sure that programs that are planned are implemented.
INVOLMENT & DECISIONS
A parish council must be sure to involve everybody in its work, such as involving the other church members in decisions. Asking the church members what they think of a particular idea is a good way to get everyone involved.
COOPERATION & CONTRIBUTION
The members of a parish council must be sure they cooperate well with the diocesan departments and with other parishes. They also contribute to the goals of the diocese and manage the land, buildings and property of the parish.
A LIST OF 12 WAYS TO CONSTRUCTIVELY MANAGE CONFLICT & 12 WAYS TO DESTRUCTIVELY MANAGE CONFLICT.
CONSTRUCTIVE MANAGEMENT:
1. Agree on a time and place to talk it out.
2. Assertively, honestly express your feelings.
3. Focus on the problem, not the person.
4. Select a neutral referee.
5. Develop a positive, mature attitude.
6. Search for a solution.
7. Focus on specifics.
8. Be open and available.
9. Affirm your responsibility.
10. When problems arise, work them out.
11. Listen, wait and learn.
12. Forgive and forget.
DESTRUCTIVE MANAGEMENT:
1. Catch the other person off guard.
2. Passively suppress your feelings.
3. Personalize the disagreement.
4. Get your friends to referee
5. Be negative and vindictive.
6. Find someone to blame
7. Generalize and exaggerate.
8. Be silent and superior.
9. Blame someone else.
10. When problems arise, walk out.
11. Presume, assume and dominate.
12. Stubbornly demand guarantees.